மீண்டும் வராத நம் நினைவுகளிருந்து
மீண்டு வர வேண்டியே இந்த கவிதைகள்...
என்னை ஆறுதல்படுத்தும் செயற்கை
முயற்சியாகத்தான் எழுத தொடங்குகிறேன்...
எல்லா துவக்கங்களின் போதும்
உன் நினைவு தொட்டே எழுத தொடங்குகிறேன்...
எழுதி முடிக்கும் வேளைகளில்
விரல்களோடு சேர்த்து மனமும் நடுங்கிபோகிறது...