Monday, March 10, 2014

உன் நினைவு சுமந்த கவிதைகள்




 நான் நானாக உணரும்
தருணங்களில் என் மனது
உதிர்க்கும் வார்த்தைகள் யாவும்
உன் நினைவு சுமந்த
கவிதைகளாயிருக்கும் ... 

Friday, May 31, 2013

பின்னிரவின் தனிமைச் சாலைகள்



பின்னிரவின் வெறிச்சோடிய,
யாருமற்ற தனிமைச் சாலைகளில் ,
உன் நினைவுகளை
அசைபோட்டபடி நடக்கும் வேளைகளில், 
நீ என் கை கோர்த்திருப்பதாகவே உணர்கிறேன்...

Thursday, October 11, 2012

மீண்டும் வராத நினைவுகள்




மீண்டும் வராத நம் நினைவுகளிருந்து 
மீண்டு வர வேண்டியே இந்த கவிதைகள்...

என்னை ஆறுதல்படுத்தும் செயற்கை 
முயற்சியாகத்தான் எழுத தொடங்குகிறேன்...

எல்லா துவக்கங்களின் போதும் 
உன் நினைவு தொட்டே எழுத தொடங்குகிறேன்...

எழுதி முடிக்கும் வேளைகளில் 
விரல்களோடு சேர்த்து மனமும் நடுங்கிபோகிறது...

Tuesday, September 4, 2012

வெளிப்படுத்தப்படாத நினைவுகள்















வெளிப்படுத்தப்பட் ட உணர்வுகள் மறைந்து
போகின்றன வெறும் கவிதைகளாக...

வெளிப்படுத்தப்படாத உன் நினைவுகள்
எப்போதும் என்னுடனே பொக்கிஷமாக...

Friday, July 20, 2012

இன்று முதல்


இன்று முதல்,
நீ நீயல்ல,
நான் அதே நான் தான் ....

உன் இருத்தலிற்கும் பிரம்மைக்கும்
வித்தியாசம் மறந்த நிலையிலும்,

நியாயப்படுத்தலிற்கான சாத்தியக் கூறுகளை
உணர முடியாத நிலையிலும்,

உன் நினைவுகளை மட்டும் எப்போதும்
அசைபோட்டுக் கொண்டிருக்கும் முதிர்ந்த இளைஞனாக...

Tuesday, July 17, 2012

மீண்டும் காதல்



மீண்டும் ஒரு வாழ்த்து அட்டை,
புதிய காதல் கவிதையோடு தயார் நிலையில்,
ஆனால் நான் மட்டும் நானில்லை.....

கடந்து வந்த பாதை,
கற்றுக் கொடுத்த பாடங்கள்,
உறங்காத விடியாத இரவுகள்,
இவையெல்லாம் இன்னொரு ஜென்மம் கேட்கிறது,
மீண்டும் ஒரு முறை யாரையாவது
உண்மையாக காதலிக்க...
  

Friday, June 8, 2012

நம் கடைசி சந்திப்பின் இறுதி நிமிடம்



நான் இன்னும் உயிர்த்திருக்கிறேன்.....
நம் கடைசி சந்திப்பின் இறுதி நிமிடம்,
இப்போது தான் முடிந்ததாக எல்லா நிகழ்வுகளின்
இறுதியிலும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்....
அதுதான் ஆழ்கடல் அமைதி தரும் மரணம்
இன்னும் தூரமிருப்பதாக என்னை உயிர்த்திருக்கச் செய்கிறது....

Friday, May 11, 2012

நீ இல்லாத இரவு






சிதைந்து போன நினைவுகளோடு
விரக்தியின் விளிம்பில் நான்,
மழை காணாத தேசத்தின் வறட்சியும்,
வறண்டு போன என் மனதோடு
போட்டியிட்டு தோற்றுப் போகிறது,
நீ இல்லாத ஒவ்வொரு இரவுகளிலும்....

Thursday, May 3, 2012

அது ஒரு பழைய ரயில் நிலையம்




















அது ஒரு பழைய ரயில் நிலையம்...
யாருமற்று அனாதையானதாய்,
பசுமையற்ற மரங்களுடன்,
அழுகின்ற குழந்தையின் சிணுங்கள்களோடு,
வெறும் ரயில்கள் வந்து போகும் இடமாக மட்டுமிருந்தது...
நாம் சந்திக்கும் ரயில் நிலையத்தின் உயிர்ப்பு,
இங்கே தொலைந்து போயிருந்தது....

Thursday, March 22, 2012

நினைவுகளின் சுவடுகள்


உன்னை காதலிக்கத் தொடங்கும் போதே
காத்திருக்கத் தொடங்கி விட்டேன்.

அந்த காத்திருப்புக்கள் தான்
என்னை கவிதை எழுத வைத்தது.

அந்த கவிதைகளெல்லாம் வெறும்
சேர்க்கப்பட்ட வார்த்தைகள் அல்ல.
பிரிந்து போன நம் நினைவுகளின் சுவடுகள்.