தனிமை திருடும் நிலவு
நீ எடுத்துச் சென்றது போக மீதமுள்ள நினைவுகளே எழுத்துரு பெற்று கவிதைகளாக இங்கு.
Sunday, February 26, 2012
உன் விரல் தொடும் நிகழ்வு
சில இனிப்பான நிமிடங்களுக்காக
பல மணி நேர காத்திருப்புகளும்
அது கொடுத்த போதைகளும்,
பரிசளிக்கும் தருணங்களை
உன் விரல் தொடும் நிகழ்வென
பதிவு செய்த பேனா பிதற்றல்களும்,
இனி நாம் நேரிட விரும்பாத
நெருடலான நம் சந்திப்புகளின்
காயத்தை ஆழப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment